கோவையில் பிளஸ் 2 தேர்வு எழுதும் 35,723 மாணவர்கள் : மாவட்ட ஆட்சியர் கே. ராஜாமணி நேரில் ஆய்வு

கோவை : கோவையில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை 35724 மாணவர்கள் எழுதி வருகின்றனர். இதனை, மாவட்ட ஆட்சியர் கே. ராஜாமணி நேரில் ஆய்வு செய்தார்.


கோவை : கோவையில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை 35724 மாணவர்கள் எழுதி வருகின்றனர். இதனை, மாவட்ட ஆட்சியர் கே. ராஜாமணி நேரில் ஆய்வு செய்தார்.



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி 12-ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டு பொதுதேர்வானது, மாணவர்களின் அழுத்ததைக் குறைக்கும் வகையில், 1,200 மதிப்பெண்களுக்கு பதிலாக, 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. மேலும், மொழித்தேர்வு பாடங்களில் 2-ம் தாள் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவையில் மட்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வை 35,723 மாணவர்கள் எழுதி வருகின்றனர். இதில் 96 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எலுத்துகின்றார்கள். 1,200 மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களாகும். இவர்களுக்காக, 120 மையங்கள அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 மையங்கள் அதிகமாகும். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும், தேர்வில் எந்தவித முறைகேடு ஏற்படாமல் தடுக்கவும் 70 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே, கோவை ஆர்.கே. ரங்கம்மாள் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சியர் கே. ராஜாமணி நேரில் ஆய்வு செய்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...