கோவை : கோவையில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை 35724 மாணவர்கள் எழுதி வருகின்றனர். இதனை, மாவட்ட ஆட்சியர் கே. ராஜாமணி நேரில் ஆய்வு செய்தார்.
கோவை : கோவையில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை 35724 மாணவர்கள் எழுதி வருகின்றனர். இதனை, மாவட்ட ஆட்சியர் கே. ராஜாமணி நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி 12-ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டு பொதுதேர்வானது, மாணவர்களின் அழுத்ததைக் குறைக்கும் வகையில், 1,200 மதிப்பெண்களுக்கு பதிலாக, 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. மேலும், மொழித்தேர்வு பாடங்களில் 2-ம் தாள் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவையில் மட்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வை 35,723 மாணவர்கள் எழுதி வருகின்றனர். இதில் 96 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எலுத்துகின்றார்கள். 1,200 மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களாகும். இவர்களுக்காக, 120 மையங்கள அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 மையங்கள் அதிகமாகும். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும், தேர்வில் எந்தவித முறைகேடு ஏற்படாமல் தடுக்கவும் 70 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கோவை ஆர்.கே. ரங்கம்மாள் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சியர் கே. ராஜாமணி நேரில் ஆய்வு செய்தார்.