கோவை : தமிழகத்தில் பா.ஜ.க., வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாகவும், வரலாற்றில் இல்லாத வெற்றியை இத்தேர்தலில் இக்கூட்டணி பெறும் என பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க தொண்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் பா.ஜ.க., தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து அருள்முருகன் என்ற பா.ஜ.க. தொண்டர் மோடியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மோடி, “பாகுபாடு இன்றி நாடு முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பா.ஜ.க., அளித்துள்ளது. பா.ஜ.க திட்டங்களினால் பயனடைந்த பொதுமக்கள் பா.ஜ.க.,விற்கு தேர்தலில் ஆதரவளிப்பார்கள். தமிழகத்தில் பா.ஜ.க., வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. வரலாற்றில் இல்லாத வெற்றியை இத்தேர்தலில் இக்கூட்டணி பெறும்.

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.,விற்கு ஆதரவு பெருகி வருகிறது. கர்நாடகாவில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை. தென்னிந்தியாவில் அதிக இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெறும். மேலும், ஊடகங்களின் கருத்து கணிப்புகள் பொய்யாகும். மக்களின் கருத்து பா.ஜ.க.,விற்கு ஆதரவாக இருக்கும், என அவர் தெரிவித்தார்.