முகிலனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : கோவையில் நல்லக்கண்ணு வலியுறுத்தல்

கோவை : முகிலனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் நடைபெறும் அனைத்துக் கட்சிகள் மாநாட்டில் நல்லக்கண்ணு வலியுறுத்தினார்.


கோவை : முகிலனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் நடைபெறும் அனைத்துக் கட்சிகள் மாநாட்டில் நல்லக்கண்ணு வலியுறுத்தினார். 

இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. . இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சி.பி.ஐ பொது செயலாளர் சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, சி.பி.ஐ.(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். 

இந்நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசியதாவது :- நாட்டின் சோதனையான நேரத்தில் இந்த அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகின்றது. பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள், நம் நாட்டின் 40 வீர்ர்களை கொலை செய்து இருக்கின்றனர். அனைத்து கட்சியினருக்கும் நாட்டை காப்பாற்றும் பணியில் உரிமை உண்டு.

சுதந்திரத்திற்கு எந்த முறையில் இடையூறு ஏற்பட்டாலும் அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும். வரக்கூடிய ஆட்சி சுதந்திரமான ஆட்சியாக, மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும். இந்திய நாட்டிற்கு யார் மூலம் ஆபத்து வந்தாலும் அதை எதிர்த்துப் போராட வேண்டும். 

குறிப்பாக, பேச்சுரிமை,எழுத்துரிமை போன்றவை பாதுகாக்க வேண்டும். தற்போது, தமிழகத்தில் வேதனையான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சாதி மோதல்கள் உருவாக்கப்படுகின்றது. தாதுமணல், கிரானைட், ஸ்டெர்லைட் போன்ற ஊழல்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. இதனால், மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. 

தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றது. சகாயம் என்ற ஆட்சியர் 23 வருடங்களில் 24 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதனிடையே, சமூக ஆர்வலர் முகிலனை காணவில்லை. பொது மக்களுக்காகப் போராடினார். இந்நிலையில், தற்போது, எங்கு இருக்கின்றார் என தகவல் தெரியவில்லை. அரசு இதில் மௌனம் சாதிக்கின்றது. முகிலன் உயிரோடு இருக்கின்றாரா என தெரிய வேண்டும்.

இதற்காக, வரும் மாதம் 2ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். முகிலன் சாதாரண மனிதர் அல்ல. மக்களுக்காக போராடியதற்காக, அவர் மீது 100 வழக்குகள் இருக்கின்றது . முகிலனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...