கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்டு, முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர் ராதா பேசினார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்டு, முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர் ராதா பேசினார்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இடம் பெற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர் ராதா பேசுகையில், "இந்த விழாவில் கலந்து கொள்ளச் சொல்லி என்னை அழைத்தனர். அப்போது, யாரை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டியிருந்தது. அப்போது, கேரள மாநில ஆளுநர் மற்றும் முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சதாசிவத்தை அழைப்பது தான் சரி எனத் தோன்றியது. அதையடுத்து, அவரை அழைத்தோம்.

நீதித்துறையில் நேர்மையாக பணியாற்றிட ஒருவரைக் கொண்டு இந்த சிலை திறக்கப்பட்டதை நான் பெருமையாகக் கருதுகிறேன். தமிழகத்தில் 30 சதவீத ஓட்டுக்கள் எம்.ஜி.ஆரின் பெயரை சொன்னால் மட்டுமே போடப்படுகிறது. செயல் மற்றும் கண் அசைவால் மட்டுமே அனைவரையுமே கட்டுப்படுத்தி வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர்," என்றார்.