கண் அசைவால் அனைவரையும் கட்டுப்படுத்தியவர் எம்.ஜி.ஆர் : பாலக்காட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர் ராதா பேச்சு

கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்டு, முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர் ராதா பேசினார்.


கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்டு, முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர் ராதா பேசினார். 

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இடம் பெற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர் ராதா பேசுகையில், "இந்த விழாவில் கலந்து கொள்ளச் சொல்லி என்னை அழைத்தனர். அப்போது, யாரை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டியிருந்தது. அப்போது, கேரள மாநில ஆளுநர் மற்றும் முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சதாசிவத்தை அழைப்பது தான் சரி எனத் தோன்றியது. அதையடுத்து, அவரை அழைத்தோம். 



நீதித்துறையில் நேர்மையாக பணியாற்றிட ஒருவரைக் கொண்டு இந்த சிலை திறக்கப்பட்டதை நான் பெருமையாகக் கருதுகிறேன். தமிழகத்தில் 30 சதவீத ஓட்டுக்கள் எம்.ஜி.ஆரின் பெயரை சொன்னால் மட்டுமே போடப்படுகிறது. செயல் மற்றும் கண் அசைவால் மட்டுமே அனைவரையுமே கட்டுப்படுத்தி வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர்," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...