கோவை : காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை : காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை 100 அடி சாலையில் உள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நகைக்கடையில், வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், மூன்று வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தனித்தனியாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நகைக்கடையின் நான்கு தளங்களில் சோதனை ஆரம்பமானது.
இந்நிறுவனம் சார்பில், கடந்த வருடம் வரி ஏய்ப்பு நடந்ததாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்ததுள்ளது, இதை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இந்த நூறு அடி சாலையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நகைக்கடை கிளை திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் முடிவில் அந்நிறுவனம் சார்பில் வரி ஏய்ப்பின் மதிப்பு குறித்து விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாலை முதல் நடைபெற்று வரும் சோதனையின் காரணமாக, வாடிக்கையாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், நகைக்கடையின் முன்புறம் உள்ள சட்டரின் கதவு பாதி அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஊழியர்கள் இன்று யாரும் வேலைக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.