கோவை வனப்பகுதிகளில் அடுத்தடுத்து பரவும் காட்டுத்தீ : ஆனைக்கட்டியில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க போராடும் வனத்துறையினர்

கோவை : கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர்.



கோவை : கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் கடந்த இரு தினங்களாக காட்டுத் தீ பரவி வருகிறது. குறிப்பாக, மருதமலை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, மதுக்கரை வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனை பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வனத்துறையினர் அணைத்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஆனைக்கட்டி வனப்பகுதியில் இன்று மதியம் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சென்ற வனத்துறை ஊழியர்கள், உள்ளூர் மக்களின் உதவியுடன், தீ பிற பகுதிகளுக்கு பரவாதவாறு கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். 

இதனிடையே, கோவை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் மதுக்கரை வனக்கோட்டப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...