புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் : வாட்ஸ் ஆப் குழு மூலம் ரூ. 2 லட்சம் திரட்டிய '1997 பேட்ச் காவலர்கள்'

கோவை : கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்த பெண் காவலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்த சக காவலர்கள், வாட்ஸ் ஆப்பில் குழு அமைத்து நிதி திரட்டி உதவிய சம்பவம் அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

கோவை : கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்த பெண் காவலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்த சக காவலர்கள், வாட்ஸ் ஆப்பில் குழு அமைத்து நிதி திரட்டி உதவிய சம்பவம் அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.



கடந்த 1997-ஆம் ஆண்டு கோவை மாநகர காவல்துறையில் பணியில் சேர்ந்தவர் வனிதா. இவர் தற்பொழுது சேலம் மாவட்டத்தில் பெண் தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட காவலருக்கு உதவும் விதமாக, கோவை மாநகர காவல்துறையில் 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தலைமை காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, "1997 பேட்ச் வாட்ஸ் ஆப்" குழுவை உருவாக்கினர். 



இதன் மூலம், அனைவரும் இணைந்து காவலர் வனிதாவின் மருத்துவ சிகிச்சைக்காக உதவி செய்ய தானாக முன்வந்து நன்கொடைகளை அளித்தனர். மொத்தம் ரூ. 2,00,000 பணம் திரட்டப்பட்டது. இந்த பணத்தை காவலர் வனிதாவை சந்தித்து கொடுக்க, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண், வாகன வசதியை செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர்கள் காவலர் வனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று, திரட்டப்பட்ட பணத்தை நேரில் வழங்கினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...