நீலகிரி : நீலகிரி - முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் 3வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயைக் கண்காணிக்க பெங்களூரிலிருந்து 2 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி : நீலகிரி - முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் 3வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயைக் கண்காணிக்க பெங்களூரிலிருந்து 2 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் வனத் தீயால் பல ஏக்கர் அளவிலான வனப்பகுதிகள் அழிந்து வருகின்றன. இந்த வனத் தீயைக் கட்டப்படுத்த வனத்துறையினர் பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர். இந்நிலையில், இங்கு பரவி வரும் வனத்தீயை பார்வையிட்டு கட்டுப்படுத்துவதற்காக 2 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டர்கள் முதுமலை புலிகள் காப்பகத்தையும் வட்டமிட்டுச் சென்றன. இரண்டு புலிகள் காப்பகத்தில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து பார்வையிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹெலிகாப்டர்கள், பந்திப்பூர் உள்ளிட்ட வனப்பகுதிகளை ஆய்வு செய்து முடித்ததும், தீயினை அணைப்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.