முதுமலை வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ : சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை நடவடிக்கை

நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக, சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக, சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் நேற்று மதியம் காட்டுத் தீ ஏற்பட்டது. மன்றாடியார் வனப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் அளவில் செடி, கொடிகள் தீயில் எரிந்து சாம்பலானது. மேலும், ஒரு சில காய்ந்த மரங்களும் தீப்பிடித்துக் கொண்டதால், தீயை கட்டுப்படுத்துவதில் வனத்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 

இந்நிலையில், காற்றின் வேகத்தின் காரணமாக, தீ வேகமாக பரவி வந்ததால், அதன் எதிர் திசையிலிருந்து எதிர் தீ மூட்டி, தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நேற்று முன் தின இரவு வரை வனத்துறையினர் மேற்கொண்டு வந்தனர். பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீ பரவாமல் கட்டுப்படுத்த பட்டாலும், ஒரு சில இடங்கள் வழியாகக் காட்டுத்தீ மேலும் சில வனப்பகுதிகளுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது. 

இதற்கிடையே, நேற்று அதிகாலையில் சற்று குறைந்த காற்றின் வேகம், மதியத்திற்கு மேல் மீண்டும் அதிகரித்து காட்டுத்தீ மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் தீ அதிகளவில் பரவி வருகின்றது. 

மேலும், ஏற்கனவே, புல்வெளிகள், செடி, கொடிகள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளதால் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 100க்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையிலும், அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முதுலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப்பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...