நீலகிரி : பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயால், பல ஏக்கர் வனம் கருகியதை அடுத்து, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் காட்டு தீ பரவாமல் தடுக்க வனத்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், முதுமலை, மசினகுடி போன்ற பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனை ஒட்டியுள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதிகளிலும், வறட்சி நிலவுகிறது. அதனால், அதிக வறட்சியின் காரணமாக, இலைகள் மற்றும் காய்ந்த சருகுகள் வனத்தில் உள்ள மூங்கில் மரங்களுடன் உரசி வனத்தீ ஏற்பட்டது.

அதன் பின்னர், இந்த வனத்தீ மளமளவெனப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் தீ மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, காட்டு தீ முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் பரவாமல் தடுக்க வனத்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளது. மேலும், இதற்காக, வனத்துறையினர் முதுமலை எல்லையில் முகாமிட்டுள்ளனர்.