கோவையில் பொதுத்தேர்வில் வெற்றி பெற பெற்றோருக்கு பாத பூஜை செய்த 12ம் வகுப்பு மாணவர்கள்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறவும், நல்ல மதிப்பெண்கள் எடுக்கவும் பெற்றோர் பாத பூஜை வழிபாடு நடத்தினர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறவும், நல்ல மதிப்பெண்கள் எடுக்கவும் பெற்றோர் பாத பூஜை வழிபாடு நடத்தினர். 

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் ஒருசேர அமர வைத்து, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் செஞ்சேரி ஆதினம் முத்துசிவராம சுவாமிகள் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். 



இதனையடுத்து, மாணவ, மாணவிகள் தங்களைப் பெற்ற தாய் தந்தையின் பாதங்களைக் கழுவி மாலை அணிவித்து பூஜைகள் செய்து ஆசியை பெற்றனர். மேலும், அனைத்து மாணவ, மாணவிகளும் தங்கள் பெற்றோர்கள் மட்டுமின்றி வந்திருந்த அனைத்து பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கினர். குறிப்பாக, கற்றுக் கொடுத்த குருவான ஆசிரியர்களின் பாதங்களை வணங்கியும் ஆசி பெற்றனர். 



இது குறித்து, பள்ளி நிர்வாகம் சார்பில் கூறுகையில், "இந்த பூஜை மாணவர்களுக்கு, எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொதுத்தேர்வுகளை சந்திக்கவும், வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத் தந்த பெற்றோரின் அன்பும், ஆசியும், எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தவும் நடத்தப்பட்டது, என்றனர். 



மேலும், இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளி செயலாளர் சிந்தனை கவிஞர் கவிதாசன், முதல்வர் உமா மகேஸ்வரி ,கல்வி ஆலோசகர் வே.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...