வாட்ஸ் ஆப் மூலம் இனி அச்சுறுத்தல் வந்தால் புகார் அளிக்கலாம் : தொலைத்தொடர்பு துறை

கோவை : வாட்ஸ் ஆப் மூலம் கொலை மிரட்டலோ அல்லது அச்சுறுத்தலோ விடுத்தால், அந்த நபர் மீது புகார் அளிக்கலாம் என மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.

கோவை : வாட்ஸ் ஆப் மூலம் கொலை மிரட்டலோ அல்லது அச்சுறுத்தலோ விடுத்தால், அந்த நபர் மீது புகார் அளிக்கலாம் என மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. 

உலகத்தில் உபயோகிக்கும் அன்றாட பொருட்களில் ஒன்றாக வாட்ஸ் ஆப் செயலில் வளர்ந்துள்ளது. இது, குறுந்தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலின் மூலம் சமீப காலமாக வதந்திகளும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சிறிய அளவிலான பிரச்சனைகளும், பூதாகரமாகிவிடும் சூழல் ஏற்படுகிறது. 

இந்த நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் கொலை மிரட்டலோ, அச்சுறுத்தலோ அல்லது கலவரத்தை தூண்டும் விதமாக ஏதேனும் குறுஞ்செய்தியை யாரேனும் அனுப்பினால், அவர்கள் மீது புகார் அளிக்கலாம். இந்த அறிவிப்பை மத்திய தொலைத்தொடர்பு துறை இன்று அறிவித்துள்ளது. 

"மிரட்டல் விடுக்கும் நபரின் எண்ணுடன் சேர்த்து, அவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியை ஸ்கீரின் ஷாட் எடுத்து, [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அதனை அனுப்ப வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள்," என்கிறார் தொலைத்தொடர்பு துறை கட்டுப்பாட்டாளர் ஆஷிஸ் ஜோஷி.

கடந்த 19-ம் தேதி தொலைத்தொடர்பு துறை, நெட்வொர்க்கில் ஆபாசமான கருத்துக்களை தவிர்க்கும் விதமான, பல்வேறு விதிமுறைகளை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...