கோவை : வாட்ஸ் ஆப் மூலம் கொலை மிரட்டலோ அல்லது அச்சுறுத்தலோ விடுத்தால், அந்த நபர் மீது புகார் அளிக்கலாம் என மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.

உலகத்தில் உபயோகிக்கும் அன்றாட பொருட்களில் ஒன்றாக வாட்ஸ் ஆப் செயலில் வளர்ந்துள்ளது. இது, குறுந்தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலின் மூலம் சமீப காலமாக வதந்திகளும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சிறிய அளவிலான பிரச்சனைகளும், பூதாகரமாகிவிடும் சூழல் ஏற்படுகிறது.
இந்த நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் கொலை மிரட்டலோ, அச்சுறுத்தலோ அல்லது கலவரத்தை தூண்டும் விதமாக ஏதேனும் குறுஞ்செய்தியை யாரேனும் அனுப்பினால், அவர்கள் மீது புகார் அளிக்கலாம். இந்த அறிவிப்பை மத்திய தொலைத்தொடர்பு துறை இன்று அறிவித்துள்ளது.
"மிரட்டல் விடுக்கும் நபரின் எண்ணுடன் சேர்த்து, அவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியை ஸ்கீரின் ஷாட் எடுத்து, [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அதனை அனுப்ப வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள்," என்கிறார் தொலைத்தொடர்பு துறை கட்டுப்பாட்டாளர் ஆஷிஸ் ஜோஷி.
கடந்த 19-ம் தேதி தொலைத்தொடர்பு துறை, நெட்வொர்க்கில் ஆபாசமான கருத்துக்களை தவிர்க்கும் விதமான, பல்வேறு விதிமுறைகளை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.