திருப்பூரில் சீரான குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து ஏராளமான பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து ஏராளமான பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 38-வது வார்டுக்குட்பட்ட பி.ஏ.பி நகர், கார்த்திக் நகர், முத்தனம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், மாதம் 3 முறை குடிநீர் விநியோகம் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 



இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், வருடந்தோறும் வரி மட்டும் வசூலிக்கும் மாநகராட்சி அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என குற்றம்சாட்டிய அப்பகுதி பெண்கள், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முத்தனம்பாளையம் - நல்லூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தை, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...