கோவையில் வருவாய் ஆய்வாளர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை : 26 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மாயம்

கோவை : வருவாய் ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்த, கொள்ளையர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கோவை : வருவாய் ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்த, கொள்ளையர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



கோவை மாவட்டம், வெள்ளலூர் எல் ஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார். இவர் தெற்கு தாலுக்கா அலுவலகத்தில் சிவில் சப்ளை துறையில், வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 17ம் தேதி குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர், நேற்று இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து, கதவை திறந்து பார்க்கும் போது, வீடு முழுவதும் பொருட்கள் சிதறியபடி கிடந்துள்ளன. மேலும், பீரோக்கள் உடைக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.



இந்த சம்பவத்தில், பீரோக்களில் இ௫ந்த 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் ஆகியவை தி௫டப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் ஆய்வுகள் மூலம் குற்றவாளிகளின் கைரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும், கொள்ளையர்கள் வீட்டின் பக்கவாட்டு கதவின் தாளை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, போலீசார் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மூலம் கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...