திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா : தேரை வடம்பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திருப்பூர் : திருமுருகன்பூண்டியில் உள்ள பழமை வாய்ந்த திருமுருகநாதசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசம் முழங்க பக்திப்பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருப்பூர் : திருமுருகன்பூண்டியில் உள்ள பழமை வாய்ந்த திருமுருகநாதசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசம் முழங்க பக்திப்பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.



திருப்பூரை அடுத்துள்ள திருமுருகன்பூண்டியில் பழமை வாய்ந்ததும், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான திருமுருகநாதசுவாமி கோயிலில் கடந்த 12ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கிய தேர்த்திருவிழா வருகின்ற 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவில் கடந்த 13ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. 

இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி மாலை நடைபெற்றது. இதில் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசம் முழங்க திருத்தேரை வடம்பிடித்து திருவீதிகள் வழியாக இழுத்து வந்தனர். தொடர்ந்து நாளையும் திருத்தேர் வடம்பிடித்து திருவீதிகள் வழியாக உலாவந்து தேர் நிலையை அடையவுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...