பந்தலூரில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை வண்டலூர் பூங்காவிற்கு அனுப்பி வைப்பு

நீலகிரி : கூடலூரையடுத்த பந்தலூரில் வீட்டிற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

நீலகிரி : கூடலூரையடுத்த பந்தலூரில் வீட்டிற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. 



நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டிற்குள் கடந்த 5-ம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. இதையறிந்த வீட்டின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை கூண்டு வைத்து பாதுகாப்பாக பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையின் முதுகு மற்றும் கால் பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, வன அலுவலர் ராகுல் உத்தரவுபடி, கால்நடை மருத்துவ குழுவினர், சிறுத்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தினசரி 3 நேரம் வனச்சரகர் மனோகரன் மேற்பார்வையில், மருத்துவர்கள் பரத்ஜோதி, நந்தினி ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சையளித்தனர். இதனால், காயங்கள் படிப்படியாக குணம் அடைந்து வந்த நிலையில், சிறுத்தையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். அதன்படி, சிறுத்தை இன்று லாரியில் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பாக கூடலூர் வன அலுவலர் ராகுல் கூறுகையில், ''பிடிக்கப்பட்ட சிறுத்தையின் காயத்திற்கு, தினசரி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை வனப்பகுதியில் விடுவிப்பதற்கு பதில், வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கு கொண்டு செல்ல உயரதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில், இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது,” என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...