குடிநீருக்கு அல்லாடும் கருப்பராயன் கோவில் தெரு மக்கள் : விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை

கோவை : கடந்த இரண்டு மாதங்களாக, கருப்பராயன் கோவில் தெரு பகுதியில் குடிநீரில், சாக்கடை நீர் கலப்பதாகவும், சரியான முறையில் குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை : கடந்த இரண்டு மாதங்களாக, கருப்பராயன் கோவில் தெரு பகுதியில் குடிநீரில், சாக்கடை நீர் கலப்பதாகவும், சரியான முறையில் குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 



கோவை மாவட்டம், புலியகுளத்திற்கு அருகில் இருக்கும் கருப்பராயன் கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும், குடிநீரும் அசுத்தமாகவே வந்துள்ளது. இது குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த பகுதி மக்களுக்கான குடிநீர் டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. 

மேலும், 6 முதல் 8 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வந்துள்ளதால் அப்பகுதியில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி குடியிருப்பை சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், அதற்கு தக்க நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. 



"இரண்டு மாதங்களுக்கு முன் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது. இதையடுத்து, நாங்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து குடிநீர் விநியோகத்தை நிறுத்தினர். இதையடுத்து, நாங்கள் அன்றாட வேலைகளுக்கு பயன்படுத்தும் தண்ணீரை, குடிநீராக அளித்து வந்தனர். இந்நிலையில், டேங்கர் லாரியும் வாரத்திற்கு ஒரு முறை தான் வருகிறது. ஒரு குடும்பத்திற்கு 4 முதல் 5 குடங்களில் குடிநீரை கொடுப்பது மிகுந்த பற்றாக்குறையை உருவாக்குகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் பல புகார்களை அளித்துள்ளோம். இரண்டு மாதங்களாகியும் இந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை," என்கிறார் அந்த பகுதியை சேர்ந்த அனிதா. 



இதைப் போலவே, அந்த பகுதிக்கு அருகில் உள்ள அந்தோணியார் தெரு, விநாயகர் கோவில் தெரு மற்றும் அதனுடன் இணைந்த தெருக்களிலும் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. 

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்கும் போது, "இந்த குடிநீர் பிரச்சினையை சரி செய்ய இருமுறை முயற்சி செய்துள்ளோம். ஆனாலும், கழிவு நீர், குடிநீருடன் தொடர்ந்து கலந்து வருகிறது. இதையொட்டி, மீண்டும் சரிசெய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் சரிசெய்யப்படும், என்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...