வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் இணைந்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் இணைந்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டணி அமைக்க ஒவ்வொரு கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணி குறித்து இன்று பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முறைப்படியான கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்பட்டது. ஆனால், அவரது வருகை திடீர் என ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று மதியம் தமிழகம் வந்தார். அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் தமழிசை சவுந்தரராஜன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், பியூஸ் கோயல் தலைமையிலான தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.,- பா.ஜ.க. இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டணி குறித்து ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. இந்தப் பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.,வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, பா.ம.க., அ.தி.மு.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியது குறிப்பிடத்தக்கது.