Exclusive : அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணி : கோவை தி.மு.க., எம்.எல்.ஏ., விமர்சனம்

கோவை : அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணி என கோவை சிங்காநல்லூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ., நா. கார்த்திக் விமர்சித்துள்ளார்.


கோவை : அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணி என கோவை சிங்காநல்லூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ., நா. கார்த்திக் விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டிக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணியாகும். தொடர்ந்து, அ.தி.மு.க., ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சிக்கும் கட்சிகளில் பா.ம.க.,வும் ஒன்று. ஒரு வாரத்திற்கு முன்பு ஊழல் அமைச்சர்களின் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியது பா.ம.க.தான். 

அதுமட்டுமின்றி, சமீபத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமனி ராமதாஸ், அ.தி.மு.க.,வின் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ், இவர்கள் இருவரும் எந்த திறமையிமில்லாதவர்கள். பட்ஜெட் பற்றிய அறிவில்லாத அடிமைகள். ஜெயலலிதா எதற்கும் உதவாதவர்களை தான் பொறுப்பில் வைத்திருந்தார். இவர்கள் டயர் நக்கிகள் எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஆதாயத்திற்காக அ.தி.மு.க.,வுடன் பா.ம.க. சேர்ந்துள்ளது. மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கூட்டணி இது. நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக இந்த கூட்டணி படுதொல்வி அடையும். தமிழ மக்கள் இவை அனைத்தையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள், எனக் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...