காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் : மாதா அமிர்தானந்த மயி மடம் அறிவிப்பு

கோவை : ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40-க்கும் அதிகமான சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும், ரூ.5 லட்சத்தை மாதா அமிர்தானந்த மயி மடம் வழங்கவுள்ளது.

கோவை : ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40-க்கும் அதிகமான சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும், ரூ.5 லட்சத்தை மாதா அமிர்தானந்த மயி மடம் வழங்கவுள்ளது. 

இது குறித்து மாதா அமிர்தானந்தமயி தேவி கூறியதாவது : "நாட்டை பாதுகாக்கின்ற பணியை செய்யும் போது உயிரிழந்திருக்கிற, வீரம் மிக்க ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது நமது பொறுப்பு. 

அவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் நேசத்திற்குரிய நபர்களுக்கும் எனது மனமார்ந்த அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது, மன அமைதிக்காகவும், நலனுக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்," இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் 

மேலும், அவரின் மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-ஆம் ஆண்டின் பாரத யாத்ரா சுற்றுப்பயணத்தில், முதல் நிறுத்தமான மைசூரில், மாதா அமிர்தானந்த மயி பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில், நிவாரணம் வழங்குவது குறித்த இந்த அறிவிப்பை மாதா அமிர்தானந்தமயி மடம் வெளியிட்டுள்ளது, எனக் கூறிப்பிடப்பட்டிருந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...