எனது பார்வையில் 'எழில்மிகு கோவை', கூறுகிறார் கோவை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஸ்ரவன் குமார்

கோவை : கோவை மாவட்டத்தின் மாநகராட்சி ஆணையருக்கு பணியிட மாற்றம் வழங்கியதை அடுத்து, கோவைக்கு நியமிக்கப்பட்ட புதிய மாநகராட்சி ஆணையர் இன்று பொறுப்பேற்றுள்ளார்.


கோவை : கோவை மாவட்டத்தின் மாநகராட்சி ஆணையருக்கு பணியிட மாற்றம் வழங்கியதை அடுத்து, கோவைக்கு நியமிக்கப்பட்ட புதிய மாநகராட்சி ஆணையர் இன்று பொறுப்பேற்றுள்ளார்.



கோவை மாவட்டத்தில், முன்னதாக பணியாற்றிய மாநகராட்சி ஆணையர் டி.என்.விஜய கார்த்திகேயன், தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணி மாற்றத்தையடுத்து, கோவைக்கு புதிய மாநகராட்சி ஆணையர் பொறுப்பிற்கு ஜெ.ஷ்ராவன் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, திருப்பூரில் துணை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஜெ.ஷ்ராவன் குமார் ஐ.ஏ.எஸ், கோவை மாநகராட்சி ஆணையராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

இவர், தெலுங்கானா மாநிலம், நாலகொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர். மும்பை ஐஐடியில் 2006ம் ஆண்டு மின்னணு தொடர்பு பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், ஐ.ஏ.எஸ்., தேர்வில் இந்திய அளவில் 52வது இடம் பிடித்துள்ளார். மேலும், அவரது முதல் பணியினை திருச்சி துணை ஆட்சியராகத் தொடங்கினார்.

கோவை மாவட்டத்தை இனி வரும் காலங்களில் வாழ்வதற்கு ஏற்ற எழில்மிகு கோவையாக மாற்றுவதே தனது இலக்கு என ஷரவன் குமார் தெரிவித்துள்ளார். மேலும், மாநகரின் சுத்தம் மற்றும் மேம்பாட்டுப்பணிகளில் சிறப்பான பங்களிப்பு அளிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...