கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் : சிபிசிஐடி விசாரணைக்கு பெற்றோர் கோரிக்கை

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாகப் புகார் கூறிய பெற்றோர், சிபிசிஐடி விசாரணை தேவை என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை : கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாகப் புகார் கூறிய பெற்றோர், சிபிசிஐடி விசாரணை தேவை என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில், இருதய நோய் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மீண்டும் குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அப்போது, குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.



இதுகுறித்து, பெற்றோர் கூறுகையில், "கோவை அரசு மருத்துவமனை தவிர வேறு எங்கும் குழந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவில்லை", என்றனர்.

இதற்கிடையில், மருத்துவமனை நிர்வாகம், இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது, மக்கள் கண்காணிப்பகத்தினர் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.

அவர்கள் கூறியதாவது ;- கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு இரத்தம் ஏற்றிய பின்பு தான், எச்ஐவி பாதிப்பு ஏற்படுள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டோர் தரப்பில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து புகார் தெரிவிப்பதற்குள் அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது பிரச்சினையை உறுதிபடுத்துவதாக உள்ளது, என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், சிபிசிஐடி விசாரணை தேவை என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த விவாகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த சமயத்தில், கோவை அரசு மருத்துவமனை தரப்பில், இது போன்ற தவறுகள் கோவை அரசு மருத்துவமனையில் நடக்க வாய்ப்பில்லை என உறுதித் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக எழும் புகார்கள் பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்துகின்றன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...