காஷ்மீர் தற்கொலைப் படை தாக்குதல் : உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கோவை மாவட்ட ஹார்டுவேர் சங்கம் சார்பில் பேரணி

கோவை : காஷ்மீரில் தற்கொலைப் படையினர் தாக்குதலால், வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, கோவை மாவட்ட ஹார்டுவேர் சங்க உறுப்பினர்கள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

கோவை : காஷ்மீரில் தற்கொலைப் படையினர் தாக்குதலால், வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, கோவை மாவட்ட ஹார்டுவேர் சங்க உறுப்பினர்கள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. 



கடந்த சில தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.ஆர்.எஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து, தற்கொலை படை நிகழ்த்திய தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உட்பட, 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்த கொடூர சம்பவத்திற்கு இந்தியாவின் சார்பில் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஹார்டுவேர் சங்க உறுப்பினர்கள் இணைந்து உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பேரணி நடத்தினர். இந்த பேரணியானது, மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள காமராஜபுரத்தில் நடைபெற்றது. இதில், வீரமரணமடைந்த வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 



மேலும், இறந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கடைகளை அடைத்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...