திருப்பூரில் குடிபோதையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு

திருப்பூர் : குடிபோதையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரால் கீழே இறக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் : குடிபோதையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரால் கீழே இறக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.



திருப்பூர், கொங்கு மெயின்ரோடு பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தின் மீது உள்ள 50 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் மீது குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் ஏறினார். பின்பு, அந்த இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் டவர் மீது ஏறிய இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



சுமாராக, ஒரு மணி நேரத்திற்குப் பின் அவரைக் கீழே இறக்கினர். அந்த வாலிபரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சபீர் என்பதும், திருப்பூரில் பிரிண்டிங்க் பட்டறையில் தங்கி பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. மேலும், சபீர் டவர் மீது ஏறுவதற்கு முன் குடிபோதையில் தன் நண்பர்களிடம் காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தீயணைப்புத்துறையினர் அவரைக் கீழே இறக்க முயற்சித்தபோது, காஷ்மீர் புல்வாமா தாக்குதலை மையப்படுத்திக் குறிப்பிட்ட மதம் குறித்துச் சமூக வலைதளங்களில் பரப்பியதால் மனமுடைந்த தற்கொலை செய்துகொள்ளச் சென்றதாக இருவேறு காரணங்களைத் தெரிவித்துள்ளார். அவர் அதிகமான குடிபோதையில் இருந்ததால், போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடிக்கை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் கூடியதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...