கோவையில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பேனர்களில் இடம்பெற்ற விடுதலைப்புலிகள் புகைப்படங்களால் பரபரப்பு

கோவை : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி பலியான ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், கோவையில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்ட பேனரில் விடுதலைப்புலிகளின் புகைப்படங்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி பலியான ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், கோவையில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்ட பேனரில் விடுதலைப்புலிகளின் புகைப்படங்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில், தற்கொலை படையை சேர்ந்த ஒருவன் 350 கிலோ வெடி மருந்து நிரப்பிய காரை ஓட்டி வந்தான். மேலும், ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற கான்வாய் பஸ் மீது மோதச் செய்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளான். இதில், ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 44 பேர் வீர மரணம் அடைந்தனர். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அனைத்து தரப்பினரும் ராணுவ வீரர்களுக்கு பேனர்கள் வைத்து, போஸ்டர்களை அடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல, கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள அழகேசன் சாலையில் 22வது வார்டு பாஜகவினர் சார்பில் நேற்று உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மேலும், இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் இறந்த வீரர்களுக்கு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனரில் வைக்கப்பட்ட புகைப்படங்கள் மறைந்த விடுதலைப்புலிகளின் புகைப்படங்களாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் தகவலறிந்த பாஜகவினர் அந்த பேனரை அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வைக்கப்பட்ட புகைப்படங்களில் விடுதலைப்புலிகளின் புகைப்படங்கள் இருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...