கோவை : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி பலியான ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், கோவையில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்ட பேனரில் விடுதலைப்புலிகளின் புகைப்படங்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில், தற்கொலை படையை சேர்ந்த ஒருவன் 350 கிலோ வெடி மருந்து நிரப்பிய காரை ஓட்டி வந்தான். மேலும், ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற கான்வாய் பஸ் மீது மோதச் செய்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளான். இதில், ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 44 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அனைத்து தரப்பினரும் ராணுவ வீரர்களுக்கு பேனர்கள் வைத்து, போஸ்டர்களை அடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல, கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள அழகேசன் சாலையில் 22வது வார்டு பாஜகவினர் சார்பில் நேற்று உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் இறந்த வீரர்களுக்கு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனரில் வைக்கப்பட்ட புகைப்படங்கள் மறைந்த விடுதலைப்புலிகளின் புகைப்படங்களாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் தகவலறிந்த பாஜகவினர் அந்த பேனரை அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வைக்கப்பட்ட புகைப்படங்களில் விடுதலைப்புலிகளின் புகைப்படங்கள் இருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.