நீலகிரி : கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பச்சை தேயிலைக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குன்னூரில் உள்ள இன்கோ தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நம்பியுள்ளனர். மேலும், 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100 -க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி நீடித்து வந்ததால், குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து குன்னூர் இன்கோ சர்வ் நிர்வாகம், அனைத்துக் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளிலும் கொள்முதல் செய்யும் பச்சை தேயிலைக்கு மாதந்தோறும் முன்கூட்டியே குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி, நடப்பு பிப்ரவரி மாதத்துக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கைகாட்டி, இத்தலார், நஞ்சநாடு, கரும்பாலம் ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.17, எடக்காடு, மஞ்சூர், பிக்கட்டி, மேற்குநாடு, மகாலிங்கா, கிண்ணக்கொரை ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.16, சாலீஸ்பரி, பந்தலூர் தொழிற்சாலைகளில் ரூ.15, பிராண்டியர், பிதர்காடு ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.14.50 பைசா, எப்பநாடு தொழிற்சாலையில் ரூ.14 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக இன்கோ அறிவித்துள்ளது.