கோவை : 'மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறையில் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நடிகை அமலா தெரிவித்துள்ளார்.
கோவை : 'மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறையில் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நடிகை அமலா தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மீடியா துறையில் பணிபுரிந்து வரும் மாணவர்களுக்கான 'மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்' குறித்த பயிலரங்கு இன்று நடைபெற்றது. ஜி.ஆர்.டி. கலையரங்கில் நடந்த இந்தப் பயிலரங்கு நிகழ்ச்சியில், நடிகையும், அண்ணாபூர்ணா இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் ஃபிலிம் & மீடியாவின் போர்டு உறுப்பினருமான அமலா அக்கினி கலந்து கொண்டார்.
பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டி. பிருந்தா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் ஆர். நந்தகுமார் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மீடியா மற்றும் அதனைச் சார்ந்துள்ள சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மீடியா துறையில் மாணவர்களின் எதிர்காலம் குறித்து நடிகை அமலா விளக்கினார்.
அவர் பேசியதாவது :- தொழில்துறையில் புதுமை மற்றும் தொழில்நுட்பம் மிகவும் அவசியம். மற்றவர்களின் ஆய்வுகளை ஆராய்வதன் மூலம், புதுமையை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கும். சரியான அணுகுமுறை, கடின உழைப்பு, தொழில் திறன், படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறன் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை பெற்றிருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். திறன்களும், திறமைகளும் மீடியா உலகில் நம்மை தக்க வைக்கும், எனக் கூறினார்.