மதியம் வந்த அழைப்பின் மகிழ்ச்சி ஓய்வதற்குள் மாலை நெஞ்சைப் பதற வைத்த டெலிபோன் அழைப்பு : தமிழக ராணுவ வீரர் சுப்பிரமணியின் வீரமரணம் குறித்து குடும்பத்தினர் கண்ணீர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று மாலை ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி வெடிமருந்து நிரப்பிய காருடன் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினார். இந்த கோர தாக்குதலில் 41 வீரர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் 38 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த வீரர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி நேற்றைய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். மற்றொரு வீரரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

ஐ.டி.ஐ. வரை படித்துள்ள சுப்பிரமணி, 5 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஆர்.பி.எப் பணியில் இணைந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், ஜம்மூ - காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த சுப்பிரமணி, கடைசியாக நேற்று மதியம் தனது மனைவிக்கு போன் செய்து பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து, தீவிராத தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில், மாலை மீண்டும் ஜம்மூ - காஷ்மீரில் இருந்து சுப்பிரமணியின் குடும்பத்தினருக்கு அழைப்பு வந்துள்ளது. தனது கணவர்தான் அழைத்துள்ளார் என ஆசையுடன் எடுத்துப் பேசிய சுப்பிரமணியின் மனைவிற்கு, தான் கேட்ட செய்தியினால் ஒருநிமிடம் இதயம் துடிப்பது நின்று போனாலானது. இதைத் தொடர்ந்து, சுப்ரமணியின் இறப்புச் செய்தி கேட்டு அவரது குடும்பத்தினரும், சொந்த ஊர் மக்களும் சொல்லில் அடங்கா துயரத்தில் ஆழ்ந்தனர். பின்னர், வீரமரணமடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியின் வீட்டின் முன்பு பொதுமக்களும், உறவினர்களும் குவிந்து வருகின்றனர். 

தற்போது, காஷ்மீரில் உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இன்று இரவுக்குள் இறுதி மரியாதைக்காக சுப்பிரமணியின் உடல் தூத்துக்குடி கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...