காரமடை அரங்கநாதர் கோவில் மாசி தேர்த்திருவிழா : கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

கோவை : மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை அரங்கநாதர் கோவில், சுமார் 1200 ஆண்டுகள் பழமையான வைணவ திருக்கோவிலாகும். இங்கு மாசிமக தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இவ்வாண்டிற்கான தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று தொடங்கியது. 



இதையடுத்து, கொடி மரத்தின் அருகே உள்ள கருடாழ்வார் சிலைக்கு பால், திருமஞ்சனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி மேளதாளம் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வளம் வந்தது. அதன் பின் வேத விர்பனர்கள் மந்திரங்கள் முழங்க, கொடி மரத்தில் கருடாழ்வார் கொடி ஏற்பட்டது. இக்கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். 



மேலும், இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியினையடுத்து, தினசரி பல்வேறு சிறப்பு வைபவங்கள், அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகனம், திருக்கல்யாண உற்சவம் எனத் தொடர்ச்சியாக நடைபெறும். அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளும் திருத்தேரோட்ட நிகழ்ச்சி வரும் 19ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. 



இதனிடையே, காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...