திருப்பூர் : திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்த இரண்டு தொழிலாளர்கள், டில்லி ஸ்டார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், கருமத்தான்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் நந்தகுமார் (32). தற்போது திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் பெருமாநல்லுரில் வசித்து வருகிறார். மேலும், இவர் பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள ஈஸ்ட் மேன் பனியன் தொழிற்சாலையில் மூத்த மெரிஸ்சென்டேசராக பணிபுரிந்து வருகிறார்.
திருப்பூர் மாவட்டம், ராக்கிய பாளையம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் மகன் அரவிந்த் வயது (39). இவரும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள ஈஸ்ட் மேன் பனியன் தொழிற்சாலையில் மெரிஸ்சென்டேசர் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 10ம் தேதி இரவில், நந்தகுமார் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரும் பணி நிமித்தமாகக் டெல்லி சென்றனர். இதையடுத்து, இருவரும் அங்குள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கி பணி செய்துள்ளனர். இதற்கிடையில், யாரும் எதிர்பாராத விதமாக, இன்று டில்லி ஸ்டார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தொழிலாளர்களும் பலியாகினர்.