திருப்பூரில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் : மக்களவையில் குரல் எழுப்பிய எம்.பி. சத்தியபாமா

திருப்பூர் : திருப்பூர் பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என மக்களவையில் மத்திய அரசுக்கு திருப்பூர் எம்.பி சத்தியபாமா வலியுறுத்தினார்.

திருப்பூர் : திருப்பூர் பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என மக்களவையில் மத்திய அரசுக்கு திருப்பூர் எம்.பி சத்தியபாமா வலியுறுத்தினார். 

மக்களவையில் அவர் பேசியதாவது :- 2018-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியும், குறைந்தபட்சம் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. நாட்டில் ஆயத்த ஆடை உற்பத்தியில் 90% சதவிகிதம் திருப்பூரில் தயாரிக்கப்படுகிறது மற்றும் 18 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி ஏற்றுமதிகள் மூலமாக நாட்டுக்கு வருவாயாக உள்ளது.

திருப்பூரில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமையும் பட்சத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கொங்கு மண்டல மக்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ வசதிகளையும், சேவைகளையும் பெறுவார்கள். மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும்‫.

எனவே, திருப்பூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைய மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...