திருப்பூர் : திருப்பூர் பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என மக்களவையில் மத்திய அரசுக்கு திருப்பூர் எம்.பி சத்தியபாமா வலியுறுத்தினார்.

மக்களவையில் அவர் பேசியதாவது :- 2018-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியும், குறைந்தபட்சம் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. நாட்டில் ஆயத்த ஆடை உற்பத்தியில் 90% சதவிகிதம் திருப்பூரில் தயாரிக்கப்படுகிறது மற்றும் 18 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி ஏற்றுமதிகள் மூலமாக நாட்டுக்கு வருவாயாக உள்ளது.
திருப்பூரில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமையும் பட்சத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கொங்கு மண்டல மக்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ வசதிகளையும், சேவைகளையும் பெறுவார்கள். மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும்.
எனவே, திருப்பூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைய மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.