கோவை : மேட்டுப்பாளையம் தென்திருமலை கோவிலில் நடைபெற்ற தங்க தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி என்றழைக்கப்படும் திருமலை வேங்கடேஸ்வர ஸ்ரீ வாரி ஆலயத்தில் இன்று ரத சப்தமி மற்றும் சூர்ய ஜெயந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலில் நடைபெறும் அனைத்து விழாக்கள் மற்றும் வைபவங்கள் இந்த தென்திருமலை கோவிலிலும் நேரம் மற்றும் நாள் தவறாமல், திருப்பதி கோவில் அர்ச்சகர்களால் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இன்று அதிகாலை முதல் கோவில் வளாகத்தில் சூர்ய பிரபை வாகனம், சேஷ வாகனம், அன்னபக்ஷி வாகனம், அனுமந்த வாகனம் மூலம் வேங்கடேஸ்வர சுவாமி திருவீதி உலா அழைத்து வரப்பட்டார். இதன் பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான தங்க தேரோட்ட நிகழ்ச்சி, மங்கள வாத்தியம் முழங்க நடைபெற்றது. தங்க தேர் பவனியில் வேங்கடேஸ்வர சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தங்க தேர் இறுதியில் நிலையினை அடைந்தது. இதில், கோவை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், முத்துபந்தல் வாகனம் மற்றும் சந்திர பிரபை வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.