திருப்பூரில் போதைப் பொருட்களை விற்கும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

திருப்பூர் : கொடுவாய் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனை செய்துவரும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் : கொடுவாய் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனை செய்துவரும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 



திருப்பூர் மாவட்டம், கொடுவாய் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், கொடுவாய் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதனை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்படுத்துவதால், உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 

இது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் சார்பில் போலீசாரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, கொடுவாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் போலீசார் பாரபட்சமின்றி சோதனை நடத்த வேண்டும். 

மேலும், போதைப் பொருட்களை விற்பனை செய்துவரும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...