தமிழகத்தை வஞ்சித்த பச்சை துரோகி பிரதமர் : திருப்பூரில் வைகோ ஆவேசம்

திருப்பூர் : தமிழகத்தை வஞ்சித்த பச்சை துரோகி பிரதமர் மோடி, தமிழகத்திற்கு எங்கு வந்தாலும் மதிமுக கருப்புக்கொடி காட்டும் என திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


திருப்பூர் : தமிழகத்தை வஞ்சித்த பச்சை துரோகி பிரதமர் மோடி, தமிழகத்திற்கு எங்கு வந்தாலும் மதிமுக கருப்புக்கொடி காட்டும் என திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 



தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், அக்கட்சியினர் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். அதில், கஜா புயல், காவிரி உள்ளிட்ட தமிழக வாழ்வாதார பிரச்சனைகளில் பிரதமர் மோடி தமிழத்திற்கு துரோகம் செய்ததாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினார். 

இந்நிலையில், வைகோ பேசிக் கொண்டிருந்த போது பாஜகவை சேர்ந்த சசிகலா என்பவர் 'பாரத் மாதா கீ ஜெ' என முழக்கமிட்டார். மேலும், போராட்டக்காரர்களைச் செருப்பால் அடிக்க முயன்ற சசிகலாவை, மதிமுக தொண்டர்கள் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது. அப்போது கற்கள் வீசியதில் மதிமுகவினரின் ஒரு கார் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, காவல் துறையினர் சசிகலாவை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், காவல்துறையினர் சசிகலா மீது பொது அமைதிக்கு இடையூறு விளைவித்ததாக, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்நிலையில், போராட்டத்தின் போது காவல் துறையினர் கைது செய்ய முயன்றதால், வைகோ 3 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே, போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திலகர் என்ற மதிமுக தொண்டர் மின்கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, வைகோ வேண்டுகோளை ஏற்று திலகர் அரை மணி நேரத்திற்கு பின் கீழே இறங்கினார். 



இதற்கிடையே, வைகோ பேசியதாவது :- சுதந்திர இந்தியா கண்டிராத துரோகங்களை பிரதமர் மோடி செய்துள்ளார். காவிரி, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் தாங்க முடியாத துரோகங்களை மத்திய அரசு செய்துள்ளது. சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. தமிழகத்தை வஞ்சித்த பச்சை துரோகி பிரதமர் மோடி. எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார். வைகோவை சீண்டி பார்க்காதீர்கள் என ஆவேசமாகத் தெரிவித்தார். 

மோடி மீது எனக்கு தனிப்பட்ட எந்த பகையும் இல்லை. தமிழகத்தை அழிக்க நினைப்பதால் எதிர்க்கிறேன். இந்த மண்ணின் வேலைக்காரன் நான். உயிருள்ள வரை தமிழக மக்களின் உரிமைக்காக போராடுவேன். மத நல்லிணக்கத்தைக் கெடுக்க இந்துத்துவா அமைப்புகள் முயற்சி செய்கின்றன. மத மோதலை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற இந்துத்துவா அமைப்புகள் முயற்சி செய்கிறது. அணை பாதுகாப்பு மசோதா வந்தால் தமிழ்நாடு பாதிக்கப்படும். இம்மசோதா வந்தால் சோவியத் யூனியன் போல இந்தியா சிதறும். மதிமுக கட்சியை உயிராக நேசிக்கிறேன். உயிரை விட தமிழக மக்களை அதிகம் நேசிக்கிறேன், இவ்வாறு அவர் பேசினார். 



"தமிழகத்திற்கு வஞ்சகம் செய்த மோடி தமிழகத்தில் எங்குவந்தாலும் போராட்டம் நடத்துவோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலானாலும், 21 சட்டமன்ற தேர்தலானாலும், திமுக கூட்டணி வெற்றி பெறும். அதற்காக மதிமுக உழைக்கும்," என்றார் வைகோ.



மேலும், இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்திற்கு பின்னர், கருப்பு கொடி போராட்டம் நடத்திய மதிமுக,.வினர் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...