மேட்டுப்பாளையத்தில் யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியை ஒட்டிய பவானி சாகர் நீர்தேக்க பகுதியில் காட்டுயானை தாக்கி விவசாயி முருகன் படுகாயம் அடைந்துள்ளார்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியை ஒட்டிய பவானி சாகர் நீர்தேக்க பகுதியில் காட்டுயானை தாக்கி விவசாயி முருகன் படுகாயம் அடைந்துள்ளார். 



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே உள்ள பவானி சாகர் நீர்தேக்க பகுதியில் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த பருவ மழையின் போது பவானி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, அணை நிரம்பியது. இதனால், அங்கு விவசாயம் செய்த விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் வெளியேறினர். 

இந்நிலையில், தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 85 அடிக்கும் குறைந்து உள்ளதால், தண்ணீரில் மூழ்கிய நிலப்பரப்புகள் தற்போது வெளியே வந்துள்ளன. இதனைக் காணவும், மீண்டும் விவசாய பணிகளை மேற்கொள்ளவும் அம்மன்புதூரை சேர்ந்த விவசாயியான முருகன், நிலத்தைப் பார்வையிட சென்றிருக்கிறார். அதன் பின் திரும்பிய அவர், ஒத்தை கல் பாலம் அருகே வந்துள்ளார்.

நீர்தேக்க பகுதிக்கு செல்லும் சாலை வனச்சாலை என்பதால், அங்கு மறைந்திருந்த காட்டுயானை முருகனை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்து இரண்டு கால் பகுதியில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை மீட்ட பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...