மருத்துவக் கழிவுகளுடன் கூடிய குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு : நடவடிக்கை எடுக்க குன்னூர் மக்கள் கோரிக்கை

நீலகிரி : குன்னூர் அருகே உபதலை குப்பைக்குழி பகுதியில் மருந்து கழிவுகளுடன் கூடிய குப்பைகளை எரிப்பதால், சுகாதாரம் சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி : குன்னூர் அருகே உபதலை குப்பைக்குழி பகுதியில் மருந்து கழிவுகளுடன் கூடிய குப்பைகளை எரிப்பதால், சுகாதாரம் சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட உபதலை பகுதியில் வள்ளுவர் நகர், வாசுகி நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகள் உள்ளன. இப்பகுதி அதிகளவில் குடியிருப்புகளைக் கொண்ட பகுதியாக உள்ளது. இங்குள்ள குப்பைக் குழியில் குன்னூரில் உள்ள 30 வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகள், துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, கொட்டப்படுகிறது. இதில், மருத்துவக் கழிவுகளும் அடங்கும்.

இவை அவ்வப்போது தீ வைத்து எரித்து விடுவதால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால், இதிலிருந்து வெளியேறும் புகையால், கண் எரிச்சல், வாந்தி மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து, புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 



எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில், குப்பைகளை எரிக்கும் செயலை கைவிடுவதோடு, மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...