வன்முறையைத் தூண்டும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்ட விவகாரம் : கோவை பா.ஜ.க. பிரமுகர் மீது ம.தி.மு.க.வினர் புகார்

கோவை : வன்முறையைத் தூண்டும் விதமாக சுவரொட்டி ஒட்டிய பா.ஜ.க., நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ம.தி.மு.க.,வினர் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை : வன்முறையைத் தூண்டும் விதமாக சுவரொட்டி ஒட்டிய பா.ஜ.க., நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ம.தி.மு.க.,வினர் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தினை ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்த நிலையில், கோவை மாநகர மாவட்ட பா.ஜ.க., இளைஞரணி சார்பில் பீளமேடு பகுதியில் பாரத பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என அறிவித்துள்ள வைகோவை வரவேற்று சிறப்பாக கவனிக்க காத்திருக்கிறோம் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், அதில் நேரமும், இடமும் அறிவித்தால் சிறப்பாக கவனிக்க நலமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் ம.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய போஸ்டரை ஒட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க.,வினர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 



ஏற்கனவே, திருப்பூர் மாவட்டத்தில் இதே வாசகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்பட்டு பா.ஜ.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோவையிலும் வன்முறை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ம.தி.மு.க.,வினர் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...