நீலகிரி : கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத சயான், மனோஜ் உள்பட 4 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மீதமுள்ள சயான், மனோஜ், திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஸ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது நேரில் ஆஜராகியும் வந்தனர். இந்த நிலையில், கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேரையும் மாவட்ட நீதிமன்றம் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
ஆனால், ஜம்சீர் அலி, சதீசன், உதயகுமார், சந்தோஷ்சாமி, மனோஜ், ஜிதின்ஜாய் ஆகிய 6 பேர்கள் மட்டுமே இன்று ஆஜராகினர். பிஜின், திபு ஆஜராகவில்லை. மேலும், சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவர் மீதும் கூடுதலாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் நந்தகுமார் உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் இன்று விசாரிக்கப்பட உள்ள நிலையில், இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், நீதிமன்றத்தில் இன்று ஆஜராகாத பிஜின், திபு, சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய 4 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.
இதனிடையே, இன்று ஆஜரான 6 பேர்களிடம் நீதிபதி வடமலை விசாரணை மேற்கொண்டார். அப்போது, வழக்கின் குற்றவாளிகள் தாங்கள் அப்பாவிகள் என நீதிமன்றத்தில் மன்றாடியதால், 6 பேருக்கும் மீண்டும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.