கோடநாடு கொலை வழக்கு : சயான், மனோஜ் உள்பட 4 பேருக்கு பிடிவாரண்ட்

நீலகிரி : கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத சயான், மனோஜ் உள்பட 4 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

நீலகிரி : கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத சயான், மனோஜ் உள்பட 4 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. 

கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக்  கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். 

மீதமுள்ள சயான், மனோஜ், திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஸ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது நேரில் ஆஜராகியும் வந்தனர். இந்த நிலையில், கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேரையும் மாவட்ட நீதிமன்றம் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. 

ஆனால், ஜம்சீர் அலி, சதீசன், உதயகுமார், சந்தோஷ்சாமி, மனோஜ், ஜிதின்ஜாய் ஆகிய 6 பேர்கள் மட்டுமே இன்று ஆஜராகினர். பிஜின், திபு ஆஜராகவில்லை.  மேலும், சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவர் மீதும் கூடுதலாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் நந்தகுமார் உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் இன்று விசாரிக்கப்பட உள்ள நிலையில், இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், நீதிமன்றத்தில் இன்று ஆஜராகாத பிஜின், திபு, சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய 4 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார். 

இதனிடையே, இன்று ஆஜரான 6 பேர்களிடம் நீதிபதி வடமலை விசாரணை மேற்கொண்டார். அப்போது, வழக்கின் குற்றவாளிகள் தாங்கள் அப்பாவிகள் என நீதிமன்றத்தில் மன்றாடியதால், 6 பேருக்கும் மீண்டும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...