கோவையில் 8 கிலோ எடையுள்ள தங்க கட்டியைக் கொள்ளையடித்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை : கோவை, சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை தாக்கி, தங்க கட்டியைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை : கோவை, சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை தாக்கி, தங்க கட்டியைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். 



ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீவ் சிங் (26). இவர் கோவை மரக்கடை பகுதியில் வசித்து வருகிறார். இவர் தங்க நகை வியாபாரம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் வியாபார நிமித்தமாகச் சென்னைக்கு விமான மூலம் சுமார் 8 கிலோ எடையுள்ள தங்க கட்டியை அனுப்ப இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார். 

அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் பிரதீவ் சிங் வந்த வாகனத்தை வழி மறித்துள்ளது. மேலும், அவர் மீது தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்த தங்ககட்டியை பறித்து சென்றனர். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதீப் சிங் ஆகியோர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு குற்றவியல் போலீசார் பிரதீவ் சிங்கிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், பிரதீவ் சிங் தான் கொண்டு வந்து இருந்த தங்கம் குறித்து முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். ஆகையால், புகாரின் உண்மை தன்மை குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

அதேபோலவே, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பலை போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

இந்த கொள்ளை சம்வத்தை அடுத்து, அதனை ஆராய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர்கள் பாஸ்கர், சோமசேகர், சோமசுந்தர், பால்ராஜ், ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் தலைமையில் விசாரணை தொடங்கியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...