கோவை பேராதீனம் சார்பில் தமிழக முதல்வருக்கு கொங்கு மாவேள் விருது

கோவை : கோவை பேரூராதினம் சார்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மாவேள் விருது வழங்கப்பட்டது.


கோவை : கோவை பேரூராதினம் சார்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மாவேள் விருது வழங்கப்பட்டது. 

கோவை, பேரூராதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் சார்பில் சாந்தலிங்கர் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. அதனுடைய அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 



இவ்விழாவில், கோவை பேரூராதினம் சார்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மாவேள் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்று கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- தரமான மருத்துவ சேவை மக்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. குறிப்பாக, கடந்த 8 ஆண்டுகளில் சுகாதார துறைக்கு தமிழக அரசு ரூ.62 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. 

தமிழகம் மருத்துவ சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. மக்கள் அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெற அதிகளவில் வருகின்றனர். சாந்தலிங்கர் மருத்துவமனையினால் சுற்றுப்புற மக்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை பெற்று பயனடைவார்கள். ஏழை, எளிய மக்களுக்காகச் சேவையாற்றுவது போற்றுதலுக்கு உரிய செயலாகும். இவ்வாறு அவர் பேசினார். 

மேலும், இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...