நீலகிரி : சென்னை ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வழக்கு விவகாரத்தில் காவல்துறையின் போக்கை கண்டித்தும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் 3000க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயங்கவில்லை.
நீலகிரி : சென்னை ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வழக்கு விவகாரத்தில் காவல்துறையின் போக்கை கண்டித்தும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் 3000க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயங்கவில்லை.

கடந்த மாதம் 25ம் தேதி சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷ், காவல்துறை அதிகாரி அவமானப்படுத்தியதில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று 3000க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களை இயக்காமல், அவருக்காக அஞ்சலி செலுத்தினர்.
உதகை, குன்னூர் , கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், உதகையில் நடைபெற்ற அஞ்சலிக்கு பின்பு கார் ஓட்டுநர்கள் கூறுகையில், "ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓட்டுநர்களின் பணி சிரமப்பட்டுச் செய்து வருகிறோம். ஒரு சிலரால் சில மன உளைச்சலுக்கு ஆளாகி உயிர் போகும் நிலை ஏற்படுகிறது, "என்றார்.
மேலும், உதகையில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போரும், சுற்றுலா வாகனங்களை வாடகைக்கு எடுத்துச் செல்வதால் பிரதான தொழிலாக கொண்டு இயக்கும் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர். இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா வாகனங்கள் இயங்காததால் சுற்றுலா பயணிகள் பாதிப்படைந்தனர்.