குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலை தேர்தல் : தனித்து போட்டியிட்ட ஐ.என்.டி.யு.சி., வெற்றி

நீலகிரி : குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், தொழிலாளர் பிரதிநிதிகள் தேர்தலில் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கம் வெற்றி பெற்றதையடுத்து, அந்த சங்கத்தை சேர்ந்த 12 பேர் பல்வேறு பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நீலகிரி : குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், தொழிலாளர் பிரதிநிதிகள் தேர்தலில் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கம் வெற்றி பெற்றதையடுத்து, அந்த சங்கத்தை சேர்ந்த 12 பேர் பல்வேறு பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 



குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணிக்குழு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பணிக்குழு தேர்வில் 10 உறுப்பினர்கள் மற்றும் கேண்டீன் குழுவில், 2 உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் சி.எப்.எல்.யூ., - டி.எப்.எல்.யூ. கூட்டணியாகவும், ஐ.என்.டி.யு.சி., தனித்தும் போட்டியிட்டது. 

இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 1,470 தொழிலாளர்களில், 93.8 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. பணிக்குழுவில், ஐ.என்.டி.யு.சி.,யை சேர்ந்த திலீப் குமார் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அருண்குமார் (இணை பொது செயலாளர்), நடராஜன் (துணைத் தலைவர்), ஜோசி லாசர் (செயல் தலைவர்), மூர்த்தி, ஏசுதாஸ், ராமகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரும், வெற்றி பெற்றனர். 

இதையடுத்து, சி.எப்.எல்.யு., தொழிற்சங்கம் சார்பில் ஈஸ்வரன், டி.எப்.எல்.யூ.,வில் மகேஸ்வரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். கேன்டீன் நிர்வாக குழுவில், ஐ.என்.டி.யு.சி., யை சேர்ந்த ராஜ்குமார், ரவிகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனை இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...