அவசர காலத்திற்கு உதவும் வகையில் திருப்பூரில் பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம்

திருப்பூர் : அவசர காலத்திற்கு உதவும் வகையில் திருப்பூரில் பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் : அவசர காலத்திற்கு உதவும் வகையில் திருப்பூரில் பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44 மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116 சார்பில் இந்த பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44-ன் தலைவர் கவிதா ஜெனார்த்தனன் மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116-ன் தலைவர் ஜெனார்த்தன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் மனோகரன், துணை ஆணையர் உமா மற்றும் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்றனர். 



இந்த பைக் ஆம்புலன்ஸை திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, 1,000-க்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காப்பற்ற இந்த பைக் ஆம்புலன்ஸ் பயன்படும் என அவர்கள் தெரிவித்தனர். 



"உயிர்களைக் காக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக் ஆம்புலன்ஸ் திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவசரத் தேவைக்கு 9842209999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்," என திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44-ன் தலைவர் கவிதா ஜெனார்த்தனன் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...