மதச்சார்பின்மையைப் போற்றும் ஸ்டாலின் இந்துக்களின் திருமண சடங்கை அவமதித்து பேசலாமா..? : தமிழிசை கேள்வி

திருப்பூர் : மதச்சார்பின்மை பற்றி பேசும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இந்துக்களின் திருமண சடங்கை அவமதித்து பேசுவது சரியா..? என திருப்பூரில் பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் : மதச்சார்பின்மை பற்றி பேசும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இந்துக்களின் திருமண சடங்கை அவமதித்து பேசுவது சரியா..? என திருப்பூரில் பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் வரும் 10-ம் தேதி நடக்கும் பா.ஜ.க., பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசவுள்ளார். இந்த நிலையில், பெருமாநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள வாஜ்பாய் திடலினை தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், பெருமாநல்லூரில் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திலும் அவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். 



ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது :- பிப்ரவரி 10-ம் தேதி பா.ஜ.க. சார்பில் நடக்கும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் பிரம்மாண்ட விழாவாக நடைபெறவுள்ளது. மதுரையைப் போலவே இங்கும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வோடு, பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி அளவில் பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்து வரும் பா.ஜ.க.,வை கிண்டலடிப்பவர்களுக்கு, தங்கள் பணிகளால், அவர்களின் கேலிகளை முறியடிப்போம்.



மதச்சார்பின்மை பற்றி பேசும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இந்துக்களின் திருமண சடங்கை அவதூறாக விமர்சித்துள்ளார். இதனை கேள்வி கேட்பவர்களை காவி என்கின்றார். ஆனால், உண்மையில் பா.ஜ.க.,தான் மதச்சார்பின்மை பற்றி பேசும் கட்சியாக உள்ளது. 50 வருடமாக ஏழைகளைப் பற்றி சிந்திக்காத ராகுல் காந்தி, திடீரென ஏழைகள் பற்றி சிந்திக்கிறார். அவர் சொல்வது போல இல்லாமல், பா.ஜ.க. அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். அதன்மூலம் இம்முறை தலைநிமிர்ந்து வாக்கு கேட்க உள்ளோம், எனக் கூறினார். 

இதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.,வை சேர்ந்த எஸ்.வி. சேகர், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தன்னை பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு அழைப்பதில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளிக்க மறுத்துவிட்டார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...